Loading...

About Us

தமிழ்நாடு பாரத ரத்னா கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம்

தொழிலாளர்கள் சேவையில் 27 ஆம் ஆண்டு.

"தமிழ்நாடு பாரத ரத்னா கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம்"
என்பதும கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைகள், நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக செயல்படும் ஒரு சமூகப் பொறுப்புள்ள தொழிலாளர் சங்கமாகும்.


"நமது சங்கம் 2000 ஆம் ஆண்டு மதுரையில் துவங்கப்பட்டு, தமிழகம் முழுவதும் கடந்த 26 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொழிாளர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் சமூக முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

எங்கள் சங்கம், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யவும் உறுதிபூண்டுள்ளது. அரசு வழங்கும் நலத்திட்டங்கள், கல்வி உதவித்தொகைகள், மருத்துவ உதவிகள், ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் பிற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவற்றைப் பெறுவதற்கு தேவையான வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்கி வருகிறது.

கட்டுமானத் தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், வீட்டு வேலைத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் பிற அமைப்புசாரா துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், தொழிலாளர் நலச் சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் எங்கள் சங்கம் தொடர்ந்து பாடுபடுகிறது.

மேலும், தொழிலாளர் நல வாரிய பதிவு, அரசு நலத்திட்ட உதவிகள் பெறுதல், தொழிலாளர் அடையாள அட்டைகள் தொடர்பான வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான முன்னேற்றத் திட்டங்கள் போன்ற பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகிறது.

ஒற்றுமை, சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் எங்கள் சங்கம், தொழிலாளர்களின் குரலாக இருந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணியில் ஈடுபட்டுள்ளது. தொழிலாளர்களின் குடும்ப நலன், குழந்தைகளின் கல்வி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக பாதுகாப்பை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.

"தொழிலாளர்களின் நலனே எங்கள் முதன்மை நோக்கம்" என்ற உயரிய இலட்சியத்துடன், தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டி, அவர்களின் எதிர்காலத்தை வளமாக்குவதற்காக தமிழகம் முழுவதும் எங்கள் சேவைகளை விரிவுபடுத்தி வருகிறோம்.

எங்கள் நோக்கம் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்தல் அரசு நலத்திட்டங்கள் அனைவரையும் சென்றடையச் செய்தல் தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்தல் கல்வி, மருத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பு வாய்ப்புகளை மேம்படுத்தல் ஒற்றுமையான தொழிலாளர் சமூகத்தை உருவாக்குதல்

தமிழ்நாடு பாரத ரத்னா கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் தொழிலாளர்களின் உரிமைக்கும், நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட நம்பிக்கையின் இயக்கம்.